வைத்தியர் ஷாபியின் வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு!!

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் மொஹமட் ஷாபியின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை எதிர்த்து குருநாகல் வைத்தியர் ஷாபி தாக்கல் செய்திருந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட நீதியரசர்கள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இன்று இடம்பெற்ற விசாரணையின்போது எதிர்காலத்தில் மேலும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டதை அடுத்தே வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பெண்களுக்கு சட்டவிரோதமாக கருத்தடை செய்தல், சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்குதல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட அவர், பின்னர் அதறகான ஆதாரங்கள் போதியளவில் இல்லாதமையினால் கடந்த யூலை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தன்னை கைது செய்தது தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என தெரிவித்து வைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக குருநாகல் பொலிஸ் பொறுப்பதிகாரி, குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் பணிப்பாளர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor