கோயிலுக்குள் சப்பாத்துடன் சென்ற வியாழேந்திரனின் ஊழியர்!!

தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற எல்லை கிராமமான ஏறாவூர் 5ம் குறிச்சி ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலயத்திற்கான கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த ஆலயத்தின் கட்டுமானப்பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த ஆலயத்திற்கான கட்டுமான பணிகள் பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைய ஈழ பதீஸ்வர ஆலய நிர்வாகத்தின் நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆலயத்திற்கு வியாழேந்திரனுடன் சென்ற சென்ற அவரின் எடுபிடி ஒருவர் சப்பாத்துடன் ஆலயத்திற்கு சென்றுள்ள நிலையில் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் வியாழேந்திரன் ஓர் இந்துவாக இருந்து பின்னர் பிறிதொரு மதத்திற்கு தாவி அங்கு தற்பொழுது போதகராக இருந்து வருகின்ற நிலையில் , அரசியல் பிரவேசத்திற்காக அவர் இந்து ஆலயங்களிற்கு சென்றுவருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor