நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் 3 ரூபாயினால் பெட்ரோலின் விலையினை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருளின் விலையில் மாற்றம் கொண்டுவரப்படும்.

அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய 92 ஒக்டைன் பெற்றோல் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய விலை 138 ரூபாயாகும். மற்ற எரிபொருள் வகைகளின் விலையில் எவ்வித மாற்றமில்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் விலை பின்வருமாறு.
92 ஒக்டைன் பெற்றோல் விலை 138 ரூபாய்
95 ஒக்டைன் பெற்றோல் விலை 164 ரூபாய்
சூப்பர் டீசல் 136 ரூபாய்
ஆட்டோ டீசல் 104 ரூபாய் ஆகும்

இதேவேளை கடந்த மாதம் 10 ஆம் திகதி ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் 92 ஒக்டைன் பெற்றோல் 3 ரூபாயினாலும், 95 ஒக்டைன் பெற்றோல் 3 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor