புதையல் தோண்டியவர்கள் கைது!

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட எட்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா, விநாயகபுரம், கண்டி, காலி பகுதிகளை சேர்ந்த 27, 33, 40, 44, 57 வயதுடையவர்களையே நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு 10மணியளவில் இராசேந்திரகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டப்போது, இராசேந்திரகுளம் மயானத்திற்கு அண்மித்த பகுதியில் புதையல் தோண்ட தயாராக இருந்த எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய மண்வெட்டிகள், அலவாங்கு, பிக்கான், பூஜைபொருட்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor