இராணுவத்தில் இணைந்தார் சந்திமால்

இலங்கை கிரிக்கட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவத்தில் உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக தினேஷ் சந்திமால் பணியாற்றவுள்ளார்.

இதேவேளை, இலங்கை இராணுவ ஆயுதப்படைகளின் அதிகாரியாக அவர் செயற்படவுள்ளதுடன், இலங்கை இராணுவ கிரிக்கெட் அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

மேலும், தேசிய விளையாட்டு வீரர்கள் நால்வர் அடுத்த இரண்டு வாரங்களில் இராணுவத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இலங்கை இராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்