பயணியால் பாகிஸ்தான் விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்!!

கடந்த வெள்ளி மான்செஸ்டரிலிருந்து இஸ்லாமாபாத் புறப்பட்ட Pakistan International Airlines (PIA) விமானம் 7 மணிநேரம் தாமதமானது.

டேக்-ஆஃப் ஆக தயாராகிக்கொண்டிருந்த அந்த விமானத்தில் ஒரு பாகிஸ்தான் பெண் பயணி தவறுதலாகக் கழிவறை என்று நினைத்து அவசர வழி கதவைத் திறந்ததால் இது நடந்தது என PIA-வின் செய்திதொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இப்படி அவசர வழி கதவு திறக்கப்பட்டதால் `emergency chute’ என அழைக்கப்படும் விமானத்தின் அவசரகால நடைமுறைகள் செயல்பட தொடங்கியிருக்கிறது.

இதன்பின் அவசரகால வழிமுறைகளைப் பின்பற்றப்பட்டு விமானத்தில் இருந்த 40 பயணிகள், பயணச் சாமான்களுடன் வெளியேற்றப்பட்டனர்.

தாமதம் ஏற்பட்டதால் இந்தப் பயணிகளுக்குத் தேவையான போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகள் PIA நிர்வாகத்தால் செய்துதரப்பட்டது. சிலர் அடுத்து புறப்பட்ட விமானங்களில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

விமானம் ஓடுதளத்தில் இருக்கும்போதே இது நடந்ததால் பெரியளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் `emergency chute’ என்பது சாதாரண விஷயம் அல்ல இதனால் எப்படியும் சில லட்சங்கள் PIA-க்குச் செலவாகியிருக்கும்.

இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருக்கும் பாகிஸ்தானின் தேசிய விமான சேவையான PIA ஏற்கெனவே நஷ்டத்தில்தான் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor