நாட்டின் வியாபாரம் வீழ்ச்சி – மஹிந்த கவலை

நாட்டின் வியாபாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாரியளவில் வியாபாரங்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கியின் கொள்ளையின் மூலம் நாடே நாசமாகியுள்ளது. கடந்த 5 வருங்களில் நாடு பின்நோக்கி சென்றுள்ளது. அபிவிருத்தி பாதியிலேயே நின்று விட்டது.

மத்திய வகுப்பினரை நாசம் செய்த அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு வர இடமளிக்க முடியாது.

வீழ்ச்சியடைந்துள்ள வியாபாரங்களை மீண்டும் நசுக்குவதை காட்டிலும் வீழ்ச்சியடைந்துள்ள வியாபாரங்களை மீள கட்டியெழுப்புவதற்கே நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.

உங்களுக்கு நாடு தொடர்பாக புரிதல் உள்ளது, மக்களை தெளிவு படுத்தக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. நாட்டை மீட்டெடுத்த தலைவர்தான் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்