இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக்

1996-ல் ஷங்கர் இயக்கிய இந்தியன் படம் பயங்கர ஹிட். ரசிகர்கள் கொண்டாடிய இந்தியன் படம் இப்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் பார்ட் 2 எடுக்கப்பட்டு வருகிறது. ஷங்கர் படம் என்றாலே அதில் ஒரு பிரமாண்டம் இருக்கும் .

20 வருடங்களுக்கு முன் இந்தியன் படத்திற்கு எவ்ளவு வரவேற்பு இருந்ததோ அதை விட நல்ல வரவேற்பு இந்தியா 2 படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து வருகின்றது.

மேலும் இப்படத்தில் நகைச்சுவை மூலம் பல சமுதாய கருத்துக்களை சொல்லி ரசிகர்களை சம்பாதித்த பத்மஸ்ரீ விவேக் சிபிஐ அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது, இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல், விவேக், காஜல் அகர்வால் என பலரும் நடித்து வரும் இந்த படம் திரைக்கு வந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் தான்.


Recommended For You

About the Author: Editor