வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!!!

அமைச்சுப் பதவியை தவறாக பயன்படுத்தி பல நிதி மோசடிகளையும் குற்றச்செயல்களையும் மேற்கொண்ட சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி அவருடைய குடியுரிமையையும் பறித்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைமை காரியாலையத்தில் இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவருடைய குடியுரிமையும் இல்லாது செய்யப்பட வேண்டும்.

இது சம்பந்தமாக மக்களுக்கு தெரிவிப்பதற்காக நாளை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு நாட்டின் அனைத்து வைத்திய சாலைகளிலும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor