ஏப்ரல் தாக்குதல் – விளக்கமறியல் நீடிப்பு!

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 64 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியை சேர்ந்த4 பெண்களும் 60 ஆண்களும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் நுவரெலியாவில் செயற்பட்ட பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபர்கள் 34 பேரும் நீதிமன்றத்திற்கு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor