கஞ்சாவுடன் சுற்றிய நால்வர் கைது!!

கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா பொதியுடன் கைதான நான்கு இளைஞர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

ஏற்று மாலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசியத் தகவல் ஒன்றை அடுத்தே குறித்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அந்தவகையில் கல்முனைக்குடிப் பிரதேசத்தில் வசிக்கும் பாறுக் முகமட் சிறாத் ஷாகிப் (வயது-26), முஹமட் றிஷாத் (வயது-28), அப்துல் கரீம் முஹமட் சுஜீர்(வயது-26), முஹமட் நவாஸ் (வயது-32), ஆகிய நால்வருமே கடற்கரை வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களிடமிருந்து சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்ட நிலையில் குறித்த இளைஞர்கள் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இன்றைய தினம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

இதேவேளை அண்மைக் காலமாக குறித்த பகுதியில் அதிகளவான போதைப் பாவனை மற்றும் போதைப் பொருள் வியாபாரம் என்பன அதிகரித்த வண்ணம் காணப்படுகின்ற நிலையில், கடந்தவாரம் 10கிலோ கஞ்சாவுடன் தாயொருவரும் மகளும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor