பாவனைக்கு வந்துவிட்டது புதிய நவிகோ அட்டை..!

உங்கள் நவிகோ மாதாந்த பயண அட்டையை இனிமேல் தொலைபேசி மூலமாகவே பெற்றுக்கொண்டு அதன் மூலமாலவே பயணிக்க முடியும்.

இந்த வசதி நேற்று செப்டம்பர் 25 ஆம் திகதி புதன்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 3 மில்லியன் மக்கள் இந்த சேவையினை பயன்படுத்த முடியும் என அறிய முடிகிறது.

சாம்சங் நிறுவனத்தின் திறன்பேசிகளில் மாத்திரம் முதலில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பரீட்சாத்த முயற்சியாக மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த வசதி, தற்போது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பயனாளர்கள், மாதாந்த. வாராந்த மற்றும் தின பயண நவிகோ அட்டைகளை தொலைபேசி ஊடாக டிஜிட்டல் வடிவத்தில் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு சிறிய செயலியினை (App) தொலைபேசியில் நிறுவினாலே போதுமானது.

பின்னர் திறன்பேசியில் இருக்கும் NFC தொழில்நுட்பம் மூலம் இதனை தொடருந்து நிலையத்தில் இருக்கும் இயந்திரத்தில் வைத்து உங்கள் பயணத்தை உறுதிப்படுத்தலாம்.

இச்சேவை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக 8,000 பேரிடம் பரீட்சாத்தமாக செயற்படுத்திப்பார்க்கப்பட்டது.


Recommended For You

About the Author: Editor