பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac சாவு ..!

சற்று முன்னர், பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac சாவடைந்துள்ளார்.  அவருக்கு தற்போது 86 வயது ஆகிறது.

இவரின் சாவை இவரின் மருமகன் Frédéric Salat-Baroux உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இயற்கை முறையில் அவர் சாவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரின் பிரிவு குறித்து உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் 1995 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டு வரை பிரெஞ்சு ஜனாதிபதியாக கடமையாற்றியிருந்தார்.
அத்துடன், பரிஸ் நகர முதல்வராகவும், உள்துறை அமைச்சராகவும், கிராமிய வள அமைச்சராகவும் இவர் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சாவடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றிய சேவைகள் குறித்த முழு விபரம் பின்னர் எமது தளத்தில் வெளியாகும்.


Recommended For You

About the Author: Editor