வீட்டை விட்டு வெளியேறும் கவின்-video

வீட்டை விட்டு வெளியேறும் கவின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு இன்று கவின் வெளியேறுவது போன்ற காட்சிகள் புரமோ வீடியோக்களில் வெளியாகி வருகிறது. இன்றைய முதல் புரமோவில் தான் வெளியேறுவதற்கான நியாயமான காரணத்தை சாண்டியிடம் கவின் விளக்கினார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இரண்டாவது புரமோவில், கவின் லாஸ்லியாவிடம் ‘உன்கிட்ட நான் சொன்னதை மட்டும் ஞாபகம் வச்சுகிட்டு மீதி நாட்களில் இரு’ என்று கூற லாஸ்லியா கோபத்துடன் ‘எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை’ என்று கூறுகிறார்.

இதனையடுத்து ‘ஞாபகம் இல்லை என்றால் அந்த போட்டோக்களை எல்லாம் பாரு’ என்று கோபமாக சொல்லிவிட்டு பெட்டி படுக்கையுடன் வெளியேற தயாராகிறார்.

அதன்பின் மீண்டும் லாஸ்லியாவிடம் வரும் கவின், ‘இந்த போட்டோக்களை வைத்துக்கொள் என லாஸ்லியா குடும்பத்தினர்களிடன் போட்டோக்களை கொடுக்கின்றார்.

எனக்கு தெரியும் நான் அவங்களுக்காகத்தான் இங்கே இருக்கின்றேன், இல்லையென்றால் நான் எப்போதோ வெளியே போயிருப்பேன் என லாஸ்லியா கூற, அதற்கு கவின், ‘நான் எதுக்கு இவ்வளவு நான் இருந்தேன்னு எனக்கு தெரியும்’ என்று கூற அதனால் லாஸ்லியா அழுகத்தொடங்குகிறார்.

கவின் வெளியேறுவது போன்று புரமோக்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் கவின் வெளியேறியிருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

நேற்றே கவின் வெளியேறியிருந்தால் இன்று காலையே கவின் வெளியேறியது குறித்த செய்தி வெளிவந்திருக்கும். எனவே கடைசி நேரத்தில் ஏதாவது திருப்பம் ஏற்பட்டு கவின் உள்ளே நீடிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது


Recommended For You

About the Author: Editor