கடலோர சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் திட்டம்!

தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் 2019 செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 21 வரை அறிவிக்கப்பட்டுள்ளது

இவ் வாரத்துக்கு இணையாக கடற்படை பல கடலோர சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

அதன்படி, கடற்கரைகளில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட ஏராளமான குப்பைகளை அகற்றுவதன் மூலம் கடற்கரையை சுத்தம் செய்வதற்கான ஒரு கடலோர தூய்மைப்படுத்தும் திட்டத்தை வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்தது.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நீல பசுமை சுற்றுச்சூழல் கருத்தின் கீழ் தீவைச் சுற்றியுள்ள அழகான கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படை பல சூழல் நட்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.


Recommended For You

About the Author: Editor