அதிவேக வீதியில் வாகன விபத்து!!

தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜூப் வாகனம் ஒன்று அதன்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த லொறி ஒன்றின் பின்னால் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (25) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் ஜீப் வாகனத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த நான்கு பெண்கள் படுகாயமடைந்த நிலையில், சாரதி மற்றும் ஒரு பெண் நாகொடை வைத்தியசாலைக்கும் இரண்டு பெண்கள் பண்டாரகம வைத்தியசாலைக்கும் மற்றும் ஒரு பெண் ஹொரணை வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

இதன்போது, பண்டாரகம வைத்தியசாலை மற்றும் நாகொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெற்கு அதிவேக வீதியின் களனிகம பொலிஸார் விசாரணைகளை ​மேற்கொள்கின்றனர்.


Recommended For You

About the Author: Editor