பங்களாதேஷில் படகு விபத்து!!

பங்களாதேஷில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுனம்கன்ஞ் மாவட்டத்தின் டெராய் பகுதியிலுள்ள சர்மா ஆற்றுப்பகுதியில் நேற்றிரவு(புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் 30 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் காற்று காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது


Recommended For You

About the Author: Editor