பெற்ற பிள்ளைகளை கட்டாயப்படுத்தி உடலுறவு

விட்சர்லாந்தில் பெற்ற பிள்ளைகள் மூவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் மண்டலத்தில் குடியிருக்கும் 59 வயது நபரே தமது மகள்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது சிறை தண்டனை பெற்றுள்ளார்.

1996 முதல் 1999 வரையான காலகட்டத்தில் தற்போது 25 மற்றும் 22 வயதான மகள்களை அவர் பலமுறை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி தமது பிள்ளைகள் மூவரும் குழந்தை பருவத்தில் இருக்கும்போதே, அவர்களை கட்டாயப்படுத்தி தம்முடன் குளிக்க வைத்து, துஸ்பிரயோகம் செய்துள்ளதாக அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளதுடன், 12,000 பிராங்குகள் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டுமின்றி தந்தையால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள 25 வயது மகளின் மருத்துவ செலவுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு, தமது முதல் மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறி இவர் தண்டிக்கப்பட்ட நிலையில்,

மீண்டும் தமது இரு பிள்ளைகளின் பாலியல் புகாரில் தண்டனை பெற்றுள்ளார். குறித்த நபர் தாய்லாந்துக்கு தப்புவதாகவும், அங்கே ஒரு பெண் பிள்ளையை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் அறிந்ததை அடுத்தே, அவரது பிள்ளைகள் இருவரும் புகார் அளித்துள்ளனர்.

மட்டுமின்றி, நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் தங்கள் தந்தை உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டும் என அந்த மனுவில், அவர்கள் இருவரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

தற்போது அந்த நபர் தாய்லாந்தில் குடிபெயர்ந்துள்ளாரா என்ற தகவல் இல்லை எனவும், இதுவரை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என்றே தெரியவந்துள்ளது


Recommended For You

About the Author: Editor