டக்ளஸ்க்கு எதிராக செய்தி எழுதியவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் அப்பத்திரிக்கையின் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி,சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு எதிர்வரும் 4ஆம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சேவுடன் டக்ளஸ் , வரதர் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை தொடர்பிலான செய்தி வெளியாகியமை தொடர்பிலையே விசாரணைக்காக ஊடகவியலாளர் அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்