சிறுமியை சித்திரவதைக்கு உட்படுத்தியதாக பானுப்ப்ரியா மீது வழக்கு

ஆந்திர மாநில சிறுமியை பணியில் அமர்த்தி சித்திரவதை செய்ததாக நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில சிறுமி ஒருவர் தி. நகர் பகுதியில் உள்ள நடிகை பானுப்ரியாவின் வீட்டில் வேலைசெய்த போது சித்திரவதை செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையே சிறுமி மீது பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் பொலிசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பானுப்ரியாவின் வீட்டில் இருந்து 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஐ.பேட், கேமரா, விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவை திருடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து சிறுமியையும், அவரது தாய் பிரபாவதியையும் பாண்டிபஜார் பொலிசார் கைது செய்திருந்தனர்.

பானுப்ரியா மற்றும் அவரது சகோதரர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் சிறுமியை கொடுமைப்படுத்தியதாக தாய் பிரபாவதி ஆந்திரமாநிலம் சோமால் கோட்டை பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக ஏற்கனவே அம்மாநில பொலிசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான தகவலை ஆந்திர போலிசார் சென்னை போலிசுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

பானுப்ரியாவின் வீடு பாண்டிபஜார் போலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்ததால் சிறுமி சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக இப்போது பாண்டிபஜார் பொலிசார் வழக்கு போட்டுள்ளனர். சிறுமியை பணியில் அமர்த்தியது, தாக்கி காயம் ஏற்படுத்தியது, மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்