யாழில். பாடசாலைகள் மூடப்பட்டன.

அதிபர்கள் , ஆசிரியர்களின் சுகவீன விடுப்பு போராட்டத்தினால் யாழில் உள்ள பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் முடக்கப்பட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர் , ஆசிரியர்களின்  சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் – போலியான வாக்குறுதிகளை வழங்கி அரசு தொடர்ச்சியாக தம்மை ஏமாற்றி வருவதாகவும்,  அரசியல் ரீதியாக நியமனங்களை வழங்கி கல்வித்துறையை சீரழித்து வருவதாகவும், ஆசிரியர் சங்கத்தினர் கூறியுள்ளதுடன்,

ஆசிரியர் அதிபர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறது. பிரிவெனா மற்றும் நன்கொடை பெறும் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டத்தை வழங்கப் பின்னடிக்கிறது. ஆசிரியர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது.

தேசிய வருமானத்தில் கல்விக்கு 6% வீதத்தை ஒதுக்காமல் பெற்றோரிடம் பணம் அறவிட்டு வருகின்றது. இவற்றிற்கு நாம் தீர்வுகாணவேண்டும்.
வெட்கக்கேடான வேதனத்தைப் பெற்றுவரும் அதிபர் ஆசிரியர்களாகிய நாம் – எமது உரிமைகளுடன் சேர்த்து இலங்கையில் தரமான கல்விக்கட்டமைப்பை உருவாக்கவும் -இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். என கோரியே இன்றைய தினமும் நாளைய தினம் சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்