பிரதோஷ வழிபாட்டின் பலன்கள் என்ன தெரியுமா…?

பிரதோஷ நேரம்: மாலை 4:30 மணி வரையிலான நேரத்தை பிரதோஷ வேளை. அந்த நேரத்தில் ஆலயம் சென்று சிவபெருமானை வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். தினமும் ,ஆலை வேளையில் வரும் பிரதோஷத்தை தினபிரதோஷம் என்று பெயர்.

மாதந்தோறும் ஒருமுறை – வளர்பிறை, தேய்பிறை திரயோதசி (13-ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்கள். பிரதொஷ நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் கலந்துக்கொள்ளவேண்டும்.

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் “சனிப்பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது.

சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலயம் சென்று வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


Recommended For You

About the Author: Editor