வெளியேறும் முன் கவின் பேசிய நெகிழ்ச்சியான பேச்சு

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்றே வெளியேறும் நபருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்ற பிக்பாஸ் அறிவிப்பை அடுத்து கவின் வெளியேற முடிவு செய்ததாக இன்றைய மூன்றாவது புரமோவில் இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ரூ.5 லட்சத்திற்காக மட்டுமின்றி நண்பர்களுக்கு விட்டுக்கொடுக்கும் வகையில் இன்று கவின் வெளியேறிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. இன்று அவர் வெளியேறினாலும் அவர் வெளியேறும் காட்சி நாளை ஒளிபரப்பப்படும் என தெரிகிறது

மேலும் கவின் வெளியேறும் முன் நண்பர்களிடம் நெகிழ்ச்சியாக பேசியதாகவும் இந்த பேச்சு இதுவரை கவினை வெறுத்தவர்களை கூட நெகிழ வைக்கும் அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யபட்டால், நண்பர்கள் வெற்றி பெற தான் விட்டு கொடுக்க தயார் என பேச்சளவில் மட்டும் சொல்லாமல் செயல் அளவிலும் செய்து காட்டிய கவின், உண்மையில் நட்புக்கு இலக்கணம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

 


Recommended For You

About the Author: Editor