பிக்பாஸ் வீட்டை விட்டு இன்றே வெளியேறுகிறாரா கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போதுள்ள ஐவரில் மூவர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவர்.

அதில் இந்த வாரம் ஞாயிறு அன்று ஒருவர் வெளியேற்றப்பட்டுவிட்டால், நால்வரில் ஒருவருக்கு மட்டுமே டைட்டில் கிடைக்கும். ஏற்கனவே இறுதி போட்டிக்கு முகின் தகுதி பெற்றுவிட்டதால் மீதியுள்ள மூவரில் இருவர் மட்டுமே இறுதிபோட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

ஆனால் இன்றே வெளியேறும் போட்டியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கின்றார். இதனையடுத்து கவின் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறார்.

கவினின் இந்த முடிவு லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கவினை செல்ல வேண்டாம் என இருவரும் தடுக்கின்றனர். ஆனால் கவின் தனது முடிவில் உறுதியாக இருப்பார் போல் தெரிகிறது.

இருப்பினும் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் வெளியேறுவாரா? அல்லது மனம் மாறுவாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.


Recommended For You

About the Author: Editor