பிரபல காமெடி நடிகர் மரணம்!

சினிமாவில் காமெடி நடிகர்கள் மிக முக்கியமானவர்கள். எவ்வளவு பெரிய ஹீரோவாக நடிகராக இருந்தாலும் காமெடி நடிகரோடு தோள் கொடுத்து தான் ஆகவேண்டும் என்பதே நிதர்சனம்.

அவர்களுக்கு ஒரு துக்கம் என்றால் அது எல்லோரிடமும் எதிரொலிக்கும். தெலுங்கு சினிமாவில் தற்போது பிரபல காமெடி நடிகர் வேணு மாதவின் மரணத்தால் சோகம் சூழ்ந்துள்ளது.

பல ஹீரோக்களுடன் நடித்த இவர் தற்போது காலமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 39 வயதாகும் அவர் சிறுநீரக கோளாறால் செகந்திராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நிலை மோசமாகி காலமாகியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1968 ல் சினிமாவுக்கு வந்த அவர் இதுவரை 170 படங்களில் நடித்துள்ளாராம்.


Recommended For You

About the Author: Editor