இடைநிறுத்தம் சட்டவிரோதமானது! மீண்டும் கூடும் பாராளுமன்றம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து பாராளுமன்றம் மீண்டும் இன்று காலை 11.30 க்கு கூடுமென சபாநாயகர் ஜோன் பேர்கோவ் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை ஐந்து வாரங்களுக்கு இடைநிறுத்தம் செய்வதற்கான பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் முடிவு சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் நேற்று காலை தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பைத் தொடர்ந்து இடைநிறுத்தத்தை ரத்துச்செய்து பாராளுமன்றத்தை உடனடியாக மீண்டும் கூட்டவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor