2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல்! தலையிட்ட RAiD அதிரடி படையினர்..!

இரண்டு பெண்கள் மீது முரட்டுத்தனமாக நடந்துகொண்டு பாலியல் தாக்குதல் நடத்திய நபர்களை RAiD அதிரடிப்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை இரவு Nantes நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, வடக்கு பிரான்சைச் சேர்ந்த இரு பெண்கள் கடந்த இரு வாரமாக Nantes நகரில் விடுமுறையை கழித்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் Saint-Sébastien-sur-Loire நகரில் குறித்த இரு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு இளஞர்கள் குறித்த பெண்களை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதோடு, ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரமும் மேற்கொண்டுள்ளனர்.

அதில் ஒரு பெண் சுயநினைவற்று மயங்கி விழுந்துள்ளார். ஒருவழியாக சம்பவ இடத்தில் இருந்து தப்பித்த இரு பெண்களும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்தே RAiD அதிரடிப்படையினர் தலையிட்டுள்ளனர். குறித்த இரு இளைஞர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor