Seine-Saint-Denis துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயம்..!!

நேற்று செவ்வாய்க்கிழமை காலை Seine-Saint-Denis நகரில் IGPN அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

காலை 6 மணிக்கு Raincy பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றுக்குள் அதிரடியாக நுழைந்த IGPN சிறப்பு அதிகாரிகள் தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர்.

நபர் ஒருவரை கைது செய்யும் நோக்கில் இந்த தேடுதல் வேட்டை இடம்பெற்றதாகவும், ஆனால் எதிர்பாரா விதமாக கட்டிடத்துக்குள் பதுங்கியிருந்த பெண் ஒருவர் IGPN அதிகாரிகள் மீது பாய்ந்ததாகவும் அறிய முடிகிறது.

இதனால் அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டதாகவும், இதில் அப்பெண் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குறித்த பெண்ணுக்கு ஐந்து பிள்ளைகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் IGPN அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor