பி வி சிந்து காட்டில் மழை..!

உலகின் முன்னணி நிறுவனங்கள் எப்போதுமே, உலக சாம்பியன்களைத் தான் தங்கள் விளம்பர தூதர்களாக வைத்திருக்கிறார்கள்.

இதற்கு நாம் குடிக்கும் பூஸ்ட் பானத்துக்கு வீராட் கோலி வருவது தொடங்கி, தோனி நாம் ஓட்டும் டிவிஎஸ் வாகனங்கள் வரை வந்து நம்மை வாங்கச் சொல்கிறார்கள்.

இப்படி இப்போது இன்னொரு இந்திய விளையாட்டு பிரபலமான பி வி சிந்து, உலகின் முன்னணி பேமெண்ட் நிறுவனங்களில் ஒன்றான விசா நிறுவனத்துக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறாராம்.

சமீபத்தில் தான் எந்த ஒரு இந்தியரும் தொடாத, பேட்மிடன் உலக சாம்பியன் சிப் பட்டம் என்கிற உயரத்தை தொட்டார் பி வி சிந்து என்பது நினைவு கூறத்தக்கது. அதோடு ஜப்பானின் டோக்கியோ நகரில், நடக்க இருக்கும் 2020 ஒலிம்பிக் கேம்ஸ் போட்டிக்கான விசா அணியின் உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டு இருக்கிறாராம்.

இந்த டீம் விசா கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறதாம். இந்த டீம் விசா திட்டத்தின் மூலம் உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளின் பதக்க கனவுக்கு உதவி செய்து வருகிறார்களாம்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளின் திறமை மற்றும் கடந்த கால பதக்கப் பட்டியல்கள் மற்றும் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு டீம் விசா அணியில் சேர்க்கிறார்களாம்.

டீம் விசாவில் சேரும் வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு நிதி உதவிகள் உடன் நிறுத்தி கொள்ளாமல், அவர்களுக்கு நிதி சார்ந்த கல்வியையும் கொடுக்கிறார்களாம். இதுவரை இப்படி உலகம் முழுக்க சுமார் 400 வீரர்கள் மற்றும் வீராங்கணைகளை ஊக்குவித்து இருப்பதாகவும் விசா நிறுவன தரப்பினர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

1986-ம் ஆண்டு முதலே ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்து வருவதாகவும் சொல்லி இருக்கிறது விசா நிறுவனம்.

தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் இடங்களில் நாம் எலெக்ட்ரானிக் பேமெண்ட் செய்கிறோம் என்றால், அதற்கு நாம் விசாவின் உதவியை மட்டுமே நாட முடியுமாம்.

அதாவது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் இடங்களில் பிரத்யேகமாக பேமெண்ட் சம்பந்தப்பட்ட வேலைகளைக் கையாள்வது இந்த விசா நிறுவனம் மட்டும் தானாம்.


Recommended For You

About the Author: Editor