என்னை நாசம் செய்யறாங்க.. காப்பாத்துங்க

சென்னை: “என்னை நாசம் செய்யறாங்க.. ஒரு ரூமுக்குள்ள அடைச்சி வச்சிருக்காங்க.. சாப்பாடு, தண்ணி இல்லை.. என்னை காப்பாத்துங்க” என்று கல்லூரி பேராசிரியை வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை தந்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்க்கிறார் இந்த இளம் பெண்.

இவர் திடீரென ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், அவர் சொல்லி உள்ளதாவது: “இங்க நான் அசிஸ்டெண்ட் புரொபசராக வேலை பார்க்கிறேன். இங்க காலேஜ் குவார்ட்டஸில் ஒன்றரை வருஷமா தங்கி இருக்கேன். இங்க நிறைய பாலியல் தொல்லை நடக்குது.

சாப்பாடு என்னை ஒரு ரூமுக்கு உள்ளே அடைச்சி வச்சி பாலியல் தொல்லை தந்துட்டு இருக்காங்க.

பிரின்சிபால் வெங்கடகிருஷ்ணன், அட்மின் லட்சுமிகாந்தன், மேனேஜர் சசிக்குமார், பைனான்சியர் செந்தில்குமார், துப்புரவு பணியாளர் முனியம்மா இவங்க எல்லாருமே எனக்கு டார்ச்சர் தர்றாங்க.. மிரட்டல் அது மட்டுமில்லை..

என்னை நாசம் செய்யும் இவங்களே வெளியில போய் என்னை பத்தி தப்பாவும் சொல்லிட்டு வர்றாங்க. என்னை மிரட்டறாங்க.. என் வாழ்க்கையே நாசமாக்கிடுவோம்னு சொல்றாங்க. 2 வாரமாக எனக்கு இந்த ரூமில் சாப்பாடு இல்லை..

தண்ணியும் தர்றது இல்லை.. உடல்ரீதியாக சோர்ந்து போய்ட்டேன். என்னை தற்கொலைக்கு தூண்டறாங்க… என்னை காப்பாத்துங்க.. எனக்கு உதவுங்க.. எனக்கு நீதி வேணும்” என்று கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

நடவடிக்கை இதையடுத்து, இந்த வீடியோ பெரும் வைரலாகி சர்ச்சையாக வெடித்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த கல்லூரியின் டீன் குணசேகரன், இதுகுறித்து விசாரிக்க கமிட்டி ஒன்று அமைத்திருப்பதாகவும், அந்த பெண் சொன்ன நபர் குற்றங்கள் செய்திருந்தால் உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வழக்கு பதிவு பின்னர், பேராசிரியை புகார் சொன்ன 5 பேர் மீது கொலைமுயற்சி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பேராசிரியை கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கும் இந்த வீடியோ இன்னமும் வைரலாகி வருகிறது.

 


Recommended For You

About the Author: Editor