அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினர் குவிப்பு!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கமையவே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்தமானிக்கு அமைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளில் உள்ளிட்ட பகுதிகளில் பொது ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் முப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சீரற்ற வானிலையால் 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தநிலையிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor