தந்தையும் மகனும் ஒரே விமானத்தில்!!

இந்நிலையில் தந்தை உதித்த தன்வத்த மற்றும் மகன் கவீஷ தன்வத்த ஆகிய இருவருமே இவ்வாறு விமானத்தை ஓட்டியுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தந்தை உதித்த தன்வத்த, இந்த விமானப் பயணம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் எனது மகனுடன் கோலாலம்பூரிலிருந்து கடுநாயக்கவுக்கு பறந்து கொண்டிருந்தேன்.

எனது துணை விமானி எனது அன்புக்குரிய ஒரே மகன், இது எங்கள் கனவு என மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

அதேபோல இது எனது குழந்தைப் பருவத்தின் கனவு என்றும், 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கனவை நனவாக்க முடிந்தததாகவும், இதற்காக தனக்கு உதவிய பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன் என மகன் கவீஷ தன்வத்த கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor