அதிவேக வீதியில் விபத்து!

தெற்கு அதிவேக வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிகபடுகின்றது.

தெற்கு அதிவேக வீதியின் பின்னத்துவ – பத்தேகவிற்கு இடையில் கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சீரற்ற வானிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியில் பயணிப்பவர்களை மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

குறிப்பாக வாகனங்களின் முன்பக்க விளக்குகளை ஒளிர விட்டவாறு பயணிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor