அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன!!

சீனாவினால் அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு வளமான எதிர்காலம் அமைய தமது அரசாங்கம் பாடுபடுவதாகவும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி அந்த முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை துடைத்தெறியும் வரை கூட்டுப் படைகளுடன் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அத்துடன், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் நீடிக்கும் வரை பொருளாதாரத் தடைகள் நீடிக்கும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனா உலக வர்த்தக அமைப்பில் இணைந்து கொண்டதன் பின்னர் அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல நாடுகளிலும் சீனப்பொருட்களால் உள்நாட்டு தொழில்கள் நலிவடைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor