துபாய் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது!

17 உயிர்களை பறித்த துபாய் பஸ் விபத்தில் இறந்த 11 இந்தியர்களின் உடல்கள் விமானம் மூலம் இன்று மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒருவரின் உடல் மட்டும் வளைகுடா நாட்டில் தகனம் செய்யப்பட்டது.

ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து கடந்த ஆறாம் தேதி மாலை துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

துபாய் அருகே ராஷியா என்ற பகுதியில் வந்தபோது, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.


Recommended For You

About the Author: Editor