ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி திருக்கேதீஸ்வரம் வீதியில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் இணைந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு குறித்த வீதியில், மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது, முச்சக்கரவண்டி ஒன்றில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

230 கிராம் எடை கொண்ட குறித்த ஐஸ் போதைப்பொருளை கொண்டுசென்ற மன்னாரை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட குறித்த ஐஸ் போதைப்பொருள் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் தலைமையிலான குழுவினரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


Recommended For You

About the Author: Editor