வானிலை மாற்றத்தினால் நோய்கள் பரவும் அபாயம்!!

கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக, பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக, தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் சுகாதார நிலைமைகள் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அநாவசியமாக வெள்ள நீரில் நடமாடுவதை தவிர்க்குமாறும், சூடாறிய நீரை மாத்திரமே பருக வேண்டும் என்று வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

பழவகைகள் மற்றும் காய்கரிகளை உட்கொள்வதற்கு முன்னர் அவற்றை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உட்கொள்கின்ற உணவில் ஈக்கள் மொய்ப்பதை தடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor