கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொள்ளைச் சம்பங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோதே, அதில் பயணித்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கள்ளியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கியும் அதற்காக பயன்படுத்தப்படும் பத்து துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன், கொள்ளைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் கொள்ளைக்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத் துறையினர் மற்றும் மட்டக்களப்பு தலைமை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே இந்த கொள்ளைக்கோஸ்டியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதன்போது கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் வீடுகளை உடைப்பதற்கான பொருட்களும் கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: Editor