சியாச்சின் பனிச்சிகரத்தை பார்வையிடுவதற்கு வாய்ப்பு!

லடாக் பகுதியில் உள்ள சியாச்சின் பனிச்சிகரத்தை மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சியாச்சின் பனிச்சிகர பகுதி உலகிலேயே மிகவும் உயரமான போர் பதற்றம் நிலவும் பகுதியாக காணப்படுகின்றது.

இந்த பகுதி பாகிஸ்தான் நாட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதி என்பதால் இராணு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இராணுவ வீரர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

அதற்காக சில இராணுவ பயற்சி இடங்கள் மக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பனிச்சிகரத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor