நுரைசேலை மின் நிலையம் விரிவாக்கம்.

நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாக 300 மெகாவோல்ட் மின்வலுவை கொண்ட புதிய நிலக்கரி மின் நிலையங்களை நிர்மாணிக்க அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 04 மின்சார அலகுகளை புதிய நிலக்கரி மின் நிலையங்களை அந்த சுற்றாடல் பகுதியில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரம் மின்சக்கி எரிசக்கி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

2018-2037 ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட நீண்டகால மின்சார தேவைக்கான திட்டத்திற்கு இணைவான வகையில் கவனத்தில் கொண்டு இந்த திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்