சோத்து முட்டை பாடல் பாடிய ஆர்.ஜே.பாலாஜி

கோமாளி படத்தை தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படமான பப்பி என்ற படத்தின் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக உள்ளது.

இதில் வருண், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, ஆர்.ஜே.விஜய் உள்பட பலர் நடித்து உள்ளனர். இந்நிலையில், பப்பி திரைப்படம், வரும் அக்டோபர் 11ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இப்படத்தில் இருந்து சோத்து முட்டை என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதனை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பாடியிருக்கிறார்.


Recommended For You

About the Author: ஈழவன்