மூன்று பிள்ளைகளை பெற்றவர்களுக்கு 45 இலட்சம் உதவி

பாரிய பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இரண்டு குடும்பங்களை சேர்ந்த தம்பதியினர்  ஒரே பிரசவத்தில் 3 பிள்ளைகளை பெற்றெடுத்தமையை அடுத்து ,  பெற்றோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (24) ஜனாதிபதி செயலகத்தில் நிதி உதவி வழங்கினார்.

இதற்கமைய ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பிள்ளைகளின் தாயாரான வத்தலை, ஹெந்தல பிரதேசத்தை சேர்ந்த திருமதி. முதித்தா தனஞ்சனி எதிரிவீரவுக்கு 25 இலட்ச ரூபாய் நிதி உதவியும், ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பிள்ளைகளின் தந்தையான இம்பல்கஸ்தெனிய, யட்டத்தாவல பிரதேசத்தில் வசிக்கும் கே.எம். துஷித்த மங்கள ரூபசிங்கவுக்கு 20 இலட்ச ரூபாய் நிதி உதவியும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

 


Recommended For You

About the Author: ஈழவன்