யாழில்.கிணற்றிலிருந்து சடலம் மீட்பு – திருட சென்ற வேளை அனர்த்தமா ?

யாழ்.நகர் பகுதியில் உள்ள வீட்டு கிணற்றுக்குள் இனம்தெரியாத நபர் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ். சிறிதர் திரையரங்குக்கு அண்மையாக உள்ள வீட்டிலையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

குறித்த வீட்டின் கிணற்றினுள் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சத்தம் கேட்டுள்ளது. அதனை கேட்ட வீட்டு உரிமையாளர் கிணற்றினுள் பார்த்த போது நபர் ஒருவர் வீழ்ந்து இருப்பதனை அவதானித்துள்ளார்.

உடனடியாக அது குறித்து யாழ்ப்பாண பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பொலிசார் வந்து பார்த்த போது குறித்த நபர் கிணற்றினுள் உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் , குறித்த நபர் வீட்டினுள் திருடும் நோக்குடன் வந்த வேளை கிணற்றினுள் தவறி விழுந்திருக்கலாம் என பொலிசார்  சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


Recommended For You

About the Author: ஈழவன்