ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்கடத்தல்களை மேற்கொள்வோர் சிக்கினர்.

ஆங்கிலக் கால்வாயினூடாக குடியேறிகளை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருபத்துமூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய  உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயினூடாக இங்கிலாந்துக்குள் குடியேறிகளை கொண்டுவரும் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படையினால் வழங்கப்பட்ட உளவுத் தகவலைத் தொடர்ந்து ஏனைய 12 பேரும் பிரான்சில் பிரெஞ்சு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படகுகளில் சட்டவிரோதமாக இங்கிலாந்து வந்த 80 க்கும் மேற்பட்டோர் ஐரோப்பாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகரித்துவரும் குடியேறிகள் பிரச்சினைகளுக்கு மத்தியில் குடிவரவு அமுலாக்கத்தின் குற்றவியல் மற்றும் நிதி விசாரணைக்குழு மற்றும் தேசிய குற்றவியல் நிறுவனம் இணைந்து நடத்திய விசாரணைகளிலேயே இந்த 23 பெரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்