பயங்கரவாதம் என்றால் அது பயங்கரவாதம் தான்

பயங்கரவாதம் என்றாலே பயங்கரவாதம்தான், அதில் நல்ல பயங்கரவாதம், மோசமான பயங்கரவாதம் என எதுவும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஏழு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயோர்க்கில் நடைபெற்ற ‘பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எத்தகைய வியூகம் அமைப்பது’ என்பது தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகளுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் கிடைப்பதை தடுத்தால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.

உலகின் எந்தப் பகுதியில் பயங்கரவாதச் செயல்கள் நடந்தாலும் அதை நல்ல பயங்கரவாதம், மோசமான பயங்கரவாதம், குறைந்த பயங்கரவாதம் அல்லது அதிகமான பயங்கரவாதம் என்று கருதக்கூடாது என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்


Recommended For You

About the Author: ஈழவன்