சஜித்தே வேட்பாளர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேதமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த அந்தக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பநிலை நீடிக்கிறது. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவா, சஜித் பிரேமதாசவா அல்லது கரு ஜயசூர்யவா அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார் என்ற குழப்பநிலை ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்பும் நீடிக்கிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவை எடுக்க கட்சியின் மத்திய குழு நாளை மறுதினம் வியாழக்கிழமை கூடுகிறது.

அதற்கு முன் இன்று இரவு வெளியான தகவல்களின் அடிப்படையில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க்க ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்திள்ளார் என்பதாகும்.

சஜித் அணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தமது தரப்புக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் புதிய இலங்கை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்