மார்க்கெட் ராஜா M.B.B.S டிரெய்லர் வெளியானது.

வசூல் ராஜா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிகர் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க்கெட் ராஜா M.B.B.S’’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே டீசர், பாடல் ஆகியன வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தில்  ராதிகா சரத்குமார்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

காவ்யா தப்பர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரபி பிலிம்ஸ் சார்பில் மோகன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

அதிரடி ஆக்ஷன் மற்றும் திகில் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளது.

கொலைகாரன் படத்திற்கு இசையமைத்த சைமன் கே கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நாசர், நிகேஷா படேல், சாம்ஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்