நீராவியடி தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்புவேன்.

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் உயிரிழந்த தேரரின் உடலை தென்னிலங்கை தேரர்களுடன் இணைந்து ஞானசார தேரர் நீதிமன்ற தீர்ப்பை மீறி எரித்தமை மிகவும் தவறான ஒரு விடயம்.

முல்லைத்தீவு மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய வகையில் செயற்பட்டதும் தவறான விடயம்.

ஆகையால், இவ்வாறான விடயங்களை வன்மையாக கண்டிப்பதுடன், நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது தேரரின் பூதவுடல் எரிக்கப்பட்டமை தொடர்பாக கேள்வியெழுப்ப உள்ளேன்” என தெரிவித்தார்


Recommended For You

About the Author: ஈழவன்