கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரை வார்க்கும் T.N.A – கருணாநிதி

தமிழ் மக்களை அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் ஏமாற்றி வருவதாக எமது தலைமுறை கட்சி தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த கட்சி, கொழும்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விடயத்தை தெரிவித்திருந்தது.

கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் தமது மாவட்ட மக்களை முழுமையாக ஏமாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தை முழுமையாக முஸ்லிம்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.

எதிர்வரும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்கும் பட்சத்தில், கிழக்கு மாகாணத்தை முழுமையாக முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி சுட்டிக்காட்டினார்.


Recommended For You

About the Author: Editor