ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்படும் அபாயம்.!!

அனைத்துவிதமான சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இருந்தும் ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பதான ‘வாடா’ இதனைத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ரஷ்யாவின் விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்கத்தின் அனுசரனையில் ஊக்கமருந்து வழங்கப்பட்டுவந்தமை தெரியவந்திருந்தது.

இதன் காரணமாக ரஷ்யாவின் விளையாட்டு வீரர்கள் பலர் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

அத்துடன் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கும் இதற்காக 15 மாத கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தற்போது ரஷ்யாவின் ஊக்கமருந்து பாவனைக்கான சோதனைக் கூடம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

குறித்த சோதனைக் கூடம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அல்லாதிருப்பதாகவும், பல விபரங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருப்பதாக வாடா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தற்போது ரஷ்ய அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

விளக்கத்தில் திருப்தியடையாத பட்சத்தில், சர்வதேச ரீதியாக நடத்தப்படுகின்ற அனைத்து வகையான விளையாட்டு நிகழ்வுகளுக்கும் ரஷ்யாவின் வீரர்களுக்கு தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor